ADDED : ஜூலை 20, 2026 01:30 AM
அ நிறம் | அளவு
ஓமலுார்: ஓமலுார் அருகே ஆர்.சி.செட்டிப்பட்டியில், தர்மபுரி - சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில், உயர்கோபுர மின் விளக்கு உள்ளது.
ஆனால் நீண்ட நாட்களாக எரியவில்லை. அப்ப-குதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் நிலையில், விளக்கு எரியாமல் இருள் சூழ்ந்துள்ளதால் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களுக்கு வழிவகுக்கும். அதனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், மின் விளக்கை எரிய வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்-தினர்.
