/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பெருந்துறை அருகே தீ பற்றி எரிந்த லாரி
/
பெருந்துறை அருகே தீ பற்றி எரிந்த லாரி
ADDED : அக் 01, 2024 07:18 AM
பெருந்துறை: பெருந்துறை அருகே, தேசிய நெடுஞ்சாலையில் பேட்டரி லோடு ஏற்றி சென்ற லாரி திடீரென்று தீ பற்றி எரிந்தது.
புனேயிலிருந்து எக்ஸிட் பேட்டரி லோடு ஏற்றிக் கொண்டு கோவை நோக்கி லாரி சென்றது. அதை தர்மபுரி அடுத்த நல்லம்-பள்ளி, ஆக்கன்பட்டியைச் சேர்ந்த மார்க்கண்டேயன் மகன் ஏழு-மலை,40, ஓட்டி சென்றார். நேற்று காலை, ஈரோடு மாவட்டம், பெருந்துறை, பெத்தாம்பாளையம் பிரிவு தேசிய நெடுஞ்சாலை அருகில் சென்ற பொழுது லாரியிலிருந்து டீசல் லீக் ஆகி தீ பற்றி எரிந்தது. பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை போராடி அணைத்தனர். தீ விபத்தில் 24 டன் பேட்டரிகள் எரிந்-துள்ளன.தீ விபத்தால் போக்குவரத்து, மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டது. பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.