/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோவில் முன் பூ விற்கும் பெண்ணை தாக்கிய கும்பல்
/
கோவில் முன் பூ விற்கும் பெண்ணை தாக்கிய கும்பல்
ADDED : ஆக 26, 2025 01:15 AM
சேலம், கோவில் முன் பூ விற்கும் பெண்ணை தாக்கிய, கும்பலை டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் மனைவி ஜெயந்தி, 58, இவர் மாரியம்மன் கோவில் முன் பூக்கடை வைத்துள்ளார். கடந்த 22ல், கோவிலுக்கு வந்த இரு பெண்களிடம், செருப்பு விடுவது குறித்து வாக்குவாதம் நடந்துள்ளது. அங்கிருந்து அவர்கள் சென்ற பின், மாலை 5:00 மணியளவில் மீண்டும் அவர்களுடன், 2 பெண், 2 ஆண் என, 6 பேர் கொண்ட கும்பல், கோவிலுக்கு வந்துள்ளது.
பூ வியாபாரி ஜெயந்தியிடம் தகராறு செய்து, பூக்கடையை தள்ளி விட்டுள்ளனர். முகத்தில் மிளகாய் பொடியை துாவி, கட்டையால் தாக்கியுள்ளனர். கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வரவும், அக்கும்பல் அங்கிருந்து தப்பியது.
இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து, பூ வியாபாரியை தாக்கிய கும்பலை தேடி வருகின்றனர்.