/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சமுதாய கூடம் வெளியே நிரந்தர பந்தல் அவசியம்
/
சமுதாய கூடம் வெளியே நிரந்தர பந்தல் அவசியம்
ADDED : ஆக 13, 2025 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி: சமுதாய கூடம் வெளியே நிரந்தர பந்தல் அமைக்க மக்கள் வலியுறுத்தினர்.சேலம் - நாமக்கல் நெடுஞ்சாலையில், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி ஊராட்சி அலுவலகம் அருகே சமுதாயக்கூடம் உள்ளது. அதை ஊராட்சி நிர்வாகம் மூலம், வாடகைக்கு விடப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் குடும்ப நிகழ்ச்சிகள், அரசின் திட்ட முகாம் உள்ளிட்டவை நடத்தி வருகின்றனர். ஆனால் இடப்பற்றாக்குறையால், அரசின் முகாம் மற்றும் தனியார் விழா நடக்கும்போது, சமுதாயகூடத்தின் வெளியே மேற்கு, தெற்கு பகுதியில் பந்தல் அமைப்பதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது.
ஊராட்சி நிதியில், சமுதாய கூடத்தின் வெளியே நிரந்தரமாக தகர பந்தல் அமைக்க, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.