/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
திருமணிமுத்தாற்றில் வெள்ளத்தால் தரைப்பாலத்தின் ஒரு பகுதி அரிப்பு
/
திருமணிமுத்தாற்றில் வெள்ளத்தால் தரைப்பாலத்தின் ஒரு பகுதி அரிப்பு
திருமணிமுத்தாற்றில் வெள்ளத்தால் தரைப்பாலத்தின் ஒரு பகுதி அரிப்பு
திருமணிமுத்தாற்றில் வெள்ளத்தால் தரைப்பாலத்தின் ஒரு பகுதி அரிப்பு
ADDED : அக் 07, 2024 03:05 AM
வீரபாண்டி: திருமணிமுத்தாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலத்தின் ஒரு பகுதி அரித்துச்செல்லப்பட்-டது.
சேலம் மாவட்டம் முழுதும் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்ததது. இதனால் மாநகரின் மொத்த கழிவுநீருடன் சாக்கடை கழிவும் கலந்து திருமணிமுத்தாற்றில் பாய்ந்தது.இதனால் ஆட்டையாம்பட்டி அருகே இனாம் பைரோஜி புதுப்பா-ளையத்தில், சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லை திருமணிமுத்-தாற்றின் குறுக்கே, 35 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தரைப்-பாலம் மூழ்கியது. போக்குவரத்து தடைபட்டு பாதசாரிகள், பள்ளி வாகனங்கள், வாகன ஓட்டிகள், 5 கி.மீ., சுற்றி ஆட்டையாம்பட்டி வழியே சென்றனர்.
ஏற்கனனே ஆற்றில் வரும் ரசாயன கழிவால் பாலத்தின் அடிப்ப-குதி அரிக்கப்பட்டு ஆங்காங்கே விரிசல் விழுந்தது. இதனால் கடந்த மாதம் நெடுஞ்சாலைத்துறை சார்பில், 'தரைப்பாலத்தின் இரு பகுதிகளிலும் பாலம் சேதம் அடைந்துள்ளதால் கனரக வாக-னங்கள் மெதுவாக செல்லவும்' என எச்சரிக்கை பலகை வைக்கப்-பட்டது. மேலும் பால இருபுறமும் சிமென்ட் கற்களை வைத்து தடுப்பு அமைத்திருந்தனர்.ஆனால் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையில், சில தடுப்பு கற்கள் அடித்துச்செல்லப்பட்டு, நாமக்கல் மாவட்ட எல்லை கரையில் தார்ச்சாலையும் பாலமும் இணையும் பகுதியில் அரிக்-கப்பட்டு பள்ளம் விழுந்துள்ளது.வெள்ள நீர் செல்வதால் பாலத்தின் சேதம் குறித்து முழுமையாக தெரியவில்லை. தண்ணீர் குறைந்த பின், பாலத்தை மக்கள் கடந்து செல்லும்படி பாதுகாப்பாக உள்ளதா, இல்லையா என தெரியவரும்.

