ADDED : டிச 15, 2024 01:03 AM
வாழப்பாடி, டிச. 15-
வாழப்பாடி, வெள்ளாளகுண்டத்தை சேர்ந்தவர் குள்ளுகவுண்டர், 77. அதே பகுதியில் அவரது தோட்டம் உள்ளது. அங்கு நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு, நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால், அங்கு சென்று பார்த்தார்.
அப்போது மர்ம நபர், ஆழ்துளை குழாய் கிணற்றில் பயன்படுத்திய, 10,000 ரூபாய் மதிப்பிலான, 200 மீட்டர் மின் ஒயரை துண்டித்து திருட முயன்றது தெரிந்தது. இதனால் அவர், மக்கள் உதவியுடன் மர்ம நபரை சுற்றி வளைத்தார். தொடர்ந்து மக்கள், தர்ம அடி கொடுத்தனர்.
தொடர்ந்து வாழப்பாடி அரசு மருத்துவ மனையில் முதலுதவி அளித்து, நேற்று காலை, வாழப்பாடி போலீசில் ஒப்படைத்தனர். குள்ளுகவுண்டர் புகார்படி போலீசார் விசாரித்ததில், ஏத்தாப்பூரை சேர்ந்தவர் ராகவன், 25, என்பதும், சில நாட்களுக்கு முன் குள்ளுகவுண்டர் தோட்ட வீட்டுக்கு, 'சென்ட்ரிங்' வேலைக்கு சென்றபோது, ஒயரை நோட்டமிட்டு தற்போது திருட்டில் ஈடுபட்டதும் தெரிந்தது. அவரை, போலீசார் கைது செய்தனர்.