ADDED : அக் 16, 2024 07:00 AM
ஆத்துார்: முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாள் விழா ஆத்துார் அருகே மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது கலாம் வாழ்க்கை வரலாறு, அவரது சாதனைகள் குறித்து தலைமை ஆசிரியர் முரளிதரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பேசினர். அதேபோல் ஆத்துார், புங்கவாடி அரசு நடுநிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்த நாளையொட்டி பாடல், பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டு, முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியருக்கு அப்துல்கலாம் நற்பணி மன்ற தலைவர் ஸ்ரீதர்குமார், பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியை சாந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
ரத்த தானம்
ஏற்காடு அறக்கட்டளையினர், வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்துடன் இணைந்து, சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள அரசு ரத்த வங்கிக்கு ஒன்றிய அலுவலகம் அருகே நேற்று ரத்ததான முகாமை நடத்தினர். மக்கள் பலர் ரத்த தானம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவ அலுவலர் தாம்சன், பி.டி.ஓ., வாசுதேவபிரபு, அறக்கட்டளை நிர்வாகிகள் ஜான் வில்லியம், சிலம்பரசன், சதீஷ்குமார் பங்கேற்றனர்.