/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வெவ்வேறு இடங்களில் விபத்து; வியாபாரி உள்பட 2 பேர் பலி
/
வெவ்வேறு இடங்களில் விபத்து; வியாபாரி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் விபத்து; வியாபாரி உள்பட 2 பேர் பலி
வெவ்வேறு இடங்களில் விபத்து; வியாபாரி உள்பட 2 பேர் பலி
ADDED : டிச 09, 2024 07:21 AM
மேட்டூர்: ஈரோடு மாவட்டம் அந்தியூர், சென்னம்பட்டி கால்நடை மருத்துவமனை அருகே வசித்தவர் சுந்தரராஜ், 60. அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு, மனைவி செல்வியுடன், மேட்டூர், கருமலைக்கூடல் அடுத்த டி.எம்.சி., நகருக்கு வந்தார். மாலை, 4:30 மணிக்கு, 'ஆக்டீவா' மொபட்டில் ஹெல்மெட் அணியாமல், சீத்தாமலை வழியே மேட்டூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த மொபட் சாய்ந்தது. தடுமாறி விழுந்ததில் படுகாயம் அடைந்த சுந்தரராஜ், அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நள்ளிரவில், மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம் பவானி, பெரியபுலியூர், செல்வ நகரை சேர்ந்தவர் செல்வராஜ், 55. சமீபகாலமாக குடும்பத்துடன், மேட்டூர், சேலம் கேம்ப், காந்திநகரில் வசித்தார். நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு செல்வராஜ், 'டி.வி.எஸ்., - 50' மொபட்டில் ஹெல்மெட் அணியாமல், சேலம் கேம்ப்பில் இருந்து மேட்டூருக்கு, சீத்தாமலை காட்டு ரோடு வழியே சென்று கொண்டிருந்தார். அப்போது பொலிரோ சரக்கு வேன், மொபட் பின்புறம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை, மக்கள் மீட்டு, மேட்டூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் நள்ளிரவு, அவர் உயிரிழந்தார்.