/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் மீது 45 நாளில் நடவடிக்கை'
/
'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் மீது 45 நாளில் நடவடிக்கை'
'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் மீது 45 நாளில் நடவடிக்கை'
'உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்கள் மீது 45 நாளில் நடவடிக்கை'
ADDED : ஜூலை 13, 2025 01:52 AM
சேலம், ''உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெறப்படும் மனுக்கள் மீது, 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி தெரிவித்தார்.இதுகுறித்து அவர், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி:
சேலம் மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டத்தில், 432 சிறப்பு முகாம் நடத்தப்படும். வரும், 15 முதல், நவ., 15 வரை நடக்க உள்ள முகாம், காலை, 9:00 முதல், மதியம், 3:00 மணி வரை நடத்தப்படும். முதல்கட்டமாக ஆக., 14 வரை, 120 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம், திட்டம் தொடர்பான கையேடு வீடுதோறும் வழங்கும் பணி, கடந்த, 8 முதல் நடந்து வருகிறது. அப்பணியில், 1,161 தன்னார்வலர்கள்
ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தமாக நகர்புற பகுதிகளில் நடக்கும், 168 முகாம்களில், 13 அரசு துறைகள் சார்பில், 43 சேவைகள், ஊரக பகுதிகளில், 264 முகாம்களில், 15 அரசுத்துறைகள் சார்பில், 46 சேவைகளை பெறலாம். இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது, 45 நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவம், காப்பீடு அட்டை பெறுவதற்கான, இ - சேவை, ஆதார் சேவைகளும் கிடைக்கும். கருணாநிதி மகளிர் உரிமைத்தொகை பெற தகுதி இருந்தும், விடுபட்ட மகளிர், முகாமில் விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.