ADDED : ஆக 09, 2026 04:52 AM

பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி
வட்டாரத்தில் தம்மநாயக்கன்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி,
வாழக்குட்டப்பட்டி, சந்தியூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில்
மானாவாரி நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவில்
மழையின்றி, வெயில் கொளுத்துவதால் நிலக்கடலை செடிகள் வாடின.
இதனால்
பனமரத்துப்பட்டி வேளாண் துறை அலுவலர்கள், நிலக்கடலை செடிகளை
வறட்சியில் இருந்து பாதுகாக்கும் முறை குறித்து,
தம்மநாயக்கன்பட்டியில் நேற்று செயல் விளக்கம் அளித்தனர்.
சந்தியூர்
வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயன், 'வெப்பத்தால்,
பயிர்களில் ஏற்படும் நீராவி போக்கை கட்டுப்படுத்தி, மழை, ஈரப்பதம்
இல்லாத நிலையிலும் குறைந்தது, 15 நாட்கள் பயிர்களை காக்கும் மெத்தலோ
பாக்டீரியம் திரவ உயிர்(பி.பி.எப்.எம்.,) உரத்தை பயன்படுத்த வேண்டும்.
ஒரு லிட்டர் நீரில், 5 மில்லி பி.பி.எப்.எம்., வீதம் கலந்து இலை வழியே
தெளிக்க வேண்டும். இது வறட்சியை தாங்கி வளர்ந்து 10 சதவீதம் கூடுதல்
மகசூல் தரும்' என்றார்.
மேலும் நிலக்கடலை செடிக்கு, பி.பி.எப்.எம்.,
தெளித்து செயல் விளக்கம் காட்டப்பட்டது. பனமரத்துப்பட்டி வேளாண்
அலுவலர் சங்கீதா, பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் நிலக்கடலை
செடிக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தினார். '
