தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி


ADDED : ஆக 09, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 09, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெங்கவல்லி:தம்மம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவியருக்கு, சென்னை, கோவை ரோட்டரி கிளப் மற்றும் முன்னாள் மாணவர்கள் அமைப்பு இணைந்து, உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியை, நேற்று முன்தினம் ஆண்கள் பள்ளியில் நடத்தின. ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.

அதில் இரு பள்ளிகளில், 10, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவியரை பாராட்டி, ரோட்டரி கிளப் சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அத்துடன் இரு பள்ளிகளிலும் பொதுத்தேர்வுகளில், 100 சதவீத தேர்ச்சி அளித்த தலைமை ஆசிரியைகள் மீனா, தேன்மலர் உள்பட, 24 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, 500 மாணவ, மாணவியருக்கு உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. ரோட்டரி கிளப் ஆளுநர் செந்தில்குமார், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள்

பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us