/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காலி பிளாஸ்டிக் பாட்டில் சேகரிக்க நடவடிக்கை
/
காலி பிளாஸ்டிக் பாட்டில் சேகரிக்க நடவடிக்கை
ADDED : செப் 21, 2024 06:51 AM
சேலம்: துாய்மை இந்தியா திட்டத்தில் சேலம் புது பஸ் ஸ்டாண்டில் சுவர்-களில் ஒட்டப்பட்ட போஸ்டர் உள்ளிட்டவற்றை அழித்தல், குப்-பையை அகற்றுதல் பணி நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:
புது பஸ் ஸ்டாண்டில் காலி பிளாஸ்டிக் பாட்டில் சேகரிக்க, 50,000 ரூபாய் மதிப்பில், 5 பிளாஸ்டிக் சேகரிப்பு தொட்டிகள் வைக்கப்-பட்டுள்ளன. அய்யாசாமி பூங்கா, புதிய, பழைய பஸ் ஸ்டாண்-டுகள், அப்சரா பாலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சுவர்களை, சித்திர சுவர்களாக மாற்றி
அமைக்க, தனியார் நிறுவனங்கள் தாமாக முன்வந்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைக்கு தனியார், தொண்டு நிறுவனங்கள் ஒத்துழைக்கும்படி
கேட்டுக்கொள்ளப்படு-கிறது. மேலும் குப்பைமேடு நிறைந்த பகுதிகளில் அவை அகற்-றப்பட்டு, மரக்கன்று நடுதல் என பசுமை புரட்சிக்கு
வழிவகுக்-கும்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பேசினார்.துணை மேயர் சாரதாதேவி, மாநகர நல அலுவலர் மோகன் உள்-பட பலர் பங்கேற்றனர்.