/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பால் சங்கத்தில் ரூ.7.58 லட்சம் நிதியிழப்பு உத்தரவிட்டும் செலுத்தாமல் 'அடாவடி'
/
பால் சங்கத்தில் ரூ.7.58 லட்சம் நிதியிழப்பு உத்தரவிட்டும் செலுத்தாமல் 'அடாவடி'
பால் சங்கத்தில் ரூ.7.58 லட்சம் நிதியிழப்பு உத்தரவிட்டும் செலுத்தாமல் 'அடாவடி'
பால் சங்கத்தில் ரூ.7.58 லட்சம் நிதியிழப்பு உத்தரவிட்டும் செலுத்தாமல் 'அடாவடி'
ADDED : அக் 30, 2025 02:28 AM
சேலம், சேலம் மாவட்டம் வாழப்பாடி, வி.புதுப்பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில், 320 உறுப்பினர்கள் மூலம், தினமும், 5,200 முதல், 5,400 லிட்டர் பால் கொள்முதல் நடக்கிறது.
அதில் பாலின் அளவு, தரத்தை குறைத்து முறைகேடு, பரிசோதனை கருவியில் தில்லுமுல்லு, மாதிரி பாலை மீண்டும் சங்க கணக்கில் வரவு வைக்காமல் விற்பனை, போலி உறுப்பினர் பெயரில் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு முறைகேடு, நிதியிழப்பு உள்பட, 25 குறைபாடுகள்
கண்டுபிடிக்கப்பட்டன.
இதுதொடர்பாக கடந்த ஜூனில், சங்க செயலர் லிங்கேஸ்வரன், 30, பால் பரிசோதகர் செந்தில்குமார், 45, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின் நடந்த விசாரணையில், சங்க, 'அனலைசர்' கருவியில், அளவு குறைத்து வைத்து, 7,58,425 ரூபாய் நிதியிழப்பு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இத்தொகையை திரும்ப செலுத்தும் காலம் வரை, 12 சதவீத வட்டியுடன், லிங்கேஸ்வரன், செந்தில்குமார், சங்க அளவையாளர் விக்னேஷ் ஆகியோர், தனித்தனியாகவோ, கூட்டாகவோ, சங்கத்துக்கு செலுத்த வேண்டும் என, சேலம் பால்வள துணைப்பதிவாளர் புவனேஸ்வரி, கடந்த ஆக., 14ல் உத்தரவிட்டார்.
இதுகுறித்து சங்க உறுப்பினர்கள் கூறியதாவது: நிதியிழப்புக்கு உடந்தையாக இருந்த விக்னேஷ் மீதான, 'சஸ்பெண்ட்' உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டதால், அவர் பணியில் உள்ளார். மூவரும் இழப்பீடு தொகையை இன்னும் செலுத்தவில்லை. சங்க புகார்படி, வாழப்பாடி போலீசார், சி.எஸ்.ஆர்., வழங்கி விசாரிக்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

