/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பா.ஜ., ஆதரவு வாக்காளர்களை நீக்க வாய்ப்பு நிர்வாகிகளை உஷார்படுத்தும் பொறுப்பாளர்

ADDED : அக் 30, 2025 02:28 AM
சேலம்,  வாக்காளர் திருத்த பணியில், பா.ஜ., ஆதரவு வாக்காளர்களை நீக்க வாய்ப்புள்ளதால், கட்சி நிர்வாகிகள் உஷாராக பணியாற்ற, பொறுப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து பா.ஜ.,வின் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் ராமலிங்கம், கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பிய கடிதம்:
தமிழக சட்டசபை தேர்தல் மே மாதம் நடக்க உள்ளது. தமிழகம் முழுதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி, நவ., 4ல் தொடங்கி, டிச., 4 வரை நடக்கும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
அப்பணியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு ஓட்டுச்சாவடியிலும் உள்ள வாக்காளர்கள் விடுபடாமல் இடம்பெறுவதை, நாம் உறுதிப்படுத்த வேண்டும். திருத்த பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்களுடன் இணைந்து, ஓட்டுச்சாவடிக்கு உட்பட்ட வாக்காளர்கள் யார் என்பதை அடையாளம் காட்ட நாம் உதவ வேண்டும். இப்பணியை பயன்படுத்தி, நம் ஆதரவு வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்க, சிலர் சதி செய்யக்கூடும். அதனால் நம் தொண்டர்கள், பூத் கமிட்டி நிர்வாகிகள், விழிப்புடன் செயல்பட வேண்டும்.