/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
365ம் ஆண்டு நடைபயணம் செல்ல ஆதிபரம்பரை காவடிகள் ஊர்வலம்
/
365ம் ஆண்டு நடைபயணம் செல்ல ஆதிபரம்பரை காவடிகள் ஊர்வலம்
365ம் ஆண்டு நடைபயணம் செல்ல ஆதிபரம்பரை காவடிகள் ஊர்வலம்
365ம் ஆண்டு நடைபயணம் செல்ல ஆதிபரம்பரை காவடிகள் ஊர்வலம்
ADDED : பிப் 10, 2025 07:31 AM
இடைப்பாடி: இடைப்பாடி பகுதிகளில் இருந்து ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தனித்தனி குழுக்களாக காவடி கட்டி, பழநிமலை முருகரை தரிசிக்க செல்வர். அதன்படி ஆதிபரம்பரையை சேர்ந்த வெள்ளண்டிவலசு, கவுண்டம்பட்டி பகுதி முருக பக்தர்கள் காவடி எடுத்து நேற்று முன்தினம் நள்ளிரவு வரை, முக்கிய வீதிகள் வழியே சென்று காவடி ஆட்டம் ஆடி வந்தனர்.
10 மணி நேரத்துக்கு மேல் ஆடிய பக்தர்கள், சென்ற இடங்களில் எல்லாம் பிற பக்தர்கள் கொடுத்த பூஜையை ஏற்றனர். இன்று அப்பகுதிகளில் தங்கும் முருக பக்தர்கள், நாளை மறுநாள், பழநி நோக்கி, 365ம் ஆண்டாக நடைபயணத்தை தொடங்குகின்றனர். வரும், 17ல் பழநிமலையில் உள்ள முருகருக்கு, காவடியில் கொண்டு செல்லப்படும் சர்க்கரையை வைத்து படையல் போட உள்ளனர்.