/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
/
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு
ADDED : பிப் 16, 2024 09:51 AM
ஆத்துார்: ஆத்துார் நகராட்சி கவுன்சிலர் கூட்டம் நேற்று நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த, நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா தலைமை வகித்தார். அதில், 33 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. தொடர்ந்து நடந்த விவாதம்:
அ.தி.மு.க., கவுன்சிலர் உமாசங்கரி: நகராட்சி வரி வருவாய் நிதியை வங்கியில் செலுத்தும் நிலையில் அத்தொகையை காட்டி தற்போது நகராட்சி மூலம் கடன் பெறப்பட்டுள்ளது. இது தெரியாமல் இருக்க, அதன் தீர்மானம் ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி.மு.க., ஆட்சியில் இதுபோன்று முறைகேடு தொடர்ந்து வருகிறது.
உடனே தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கவேல், சந்திரா, வி.சி., கவுன்சிலர் நாராயணன் ஆகியோர், 'அ.தி.மு.க., ஆட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் கூட நடத்தவில்லை. பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ளவில்லை. தி.மு.க., ஆட்சியில் தான் அதிகளவில் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன' என்றனர்.
இதனால், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உமாசங்கரி, ராஜேஷ்குமார், மணி, கலைச்செல்வி ஆகியோர், நகராட்சி நிதி வருவாயை தவறான முறையில் பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தனர்.
தி.மு.க., கவுன்சிலர் ஜீவா: ஆத்துார் பழைய பஸ் ஸ்டாண்டில், 57 கடைகள் கட்டப்படுகின்றன. ஏற்கனவே கடை நடத்தியவர்களுக்கு மீண்டும் கடை கிடைக்குமா? வாடகை உயர்வு இருக்குமா?
கமிஷனர் சையதுமுஸ்தபா கமால்: கடை கட்டிய பின் வாடகை நிர்ணயித்து ஏலம் நடத்தப்படும். அப்போது ஏற்கனவே கடை வைத்துள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இவ்வாறு விவாதம்
நடந்தது.