/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அ.தி.மு.க., நிர்வாகி கொலை வழக்கு; 6 பேரை 2 நாள் காவல் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு

ADDED : ஜூலை 19, 2024 02:31 AM
சேலம்: அ.தி.மு.க., நிர்வாகி சண்முகம் கொலை வழக்கில், ஆறு பேரை இரண்டு நாட்கள் காவல் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்-டுள்ளது.
சேலம் கொண்டலாம்
பட்டியை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி சண்முகம், 60. இவர் கொண்டலாம்பட்டி, அ.தி.மு.க., பகுதி செயலராக இருந்தார். கடந்த, 3ம் தேதி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்-பட்டார். அன்ன
தானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த, 55 வது வார்டு தி.மு.க., கவுன்சிலரின் கணவர் சதீஷ்-குமார், அருண்குமார் உட்பட, 11 பேரை கைது செய்தனர். தி.மு.க., கவுன்சிலர் தனலட்சுமி உட்பட மூவரை தேடி வருகின்-றனர்.
கைது செய்தவர்களிடம் நடத்திய விசாரணையில் வார்டு பணி, லாட்டரி விற்பனை உள்ளிட்டவைகளுக்கு சண்முகம் இடையூ-றாக இருந்து வந்ததால் நண்பர்கள் மூலம் கொலை செய்தது தெரியவந்தது. அனைவரும் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என கண்டறிவதற்காக சதீஷ்குமார், அருண்குமார், சீனிவாச பெருமாள், பாபு, முருகன், பூபதி ஆகிய ஆறு பேரை காவல் நிலையத்தில் விசாரிக்க, அன்னதானப்பட்டி போலீசார் முடிவு செய்தனர்.
இது தொடர்பாக அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சின்ன-தங்கம், சேலம் 4வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு-தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது.
சதீஷ்குமார், அருண்குமார் உள்பட ஆறு பேரை சேலம் 4வது நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆறு பேரையும், இரண்டு நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்ற நடுவர் யுவராஜ் உத்தரவிட்டார்.