/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'அ.தி.மு.க., குடும்பத்தில் உள்ள மகன்களை புது கட்சியில் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்'
/
'அ.தி.மு.க., குடும்பத்தில் உள்ள மகன்களை புது கட்சியில் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்'
'அ.தி.மு.க., குடும்பத்தில் உள்ள மகன்களை புது கட்சியில் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்'
'அ.தி.மு.க., குடும்பத்தில் உள்ள மகன்களை புது கட்சியில் சேராமல் பார்த்துக்கொள்ளுங்கள்'
ADDED : செப் 21, 2024 06:51 AM
ஆத்துார்: ''புது கட்சிகள் நிறைய உருவாகின்றன. அ.தி.மு.க., குடும்பத்தில் உள்ள மகன், மகள், பேரன் உள்ளிட்டோரை, அந்த கட்சியில் சேராமல் இருக்க செய்ய வேண்டும்,'' என, முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேசினார்.
சேலம் மாவட்டம் ஆத்துார் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில் செயல்வீரர் கூட்டம் ஈச்சம்பட்டியில் நேற்று நடந்தது. சேலம் புற-நகர் மாவட்ட செயலர் இளங்கோவன் தலைமை வகித்தார். அதில் முன்னாள் அமைச்சர் அன்பழகன் பேசியதாவது:
கொரோனா, இயற்கை சீற்றங்கள் இருந்தபோது கூட, அ.தி.மு.க., ஆட்சியில் விலை-யேற்றம் இல்லை. தி.மு.க.,வில் நிர்வாக திறமை இல்லாததால் அரிசி, மளிகை
பொருள், கட்டுமான பொருள் உள்ளிட்ட அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. தி.மு.க.,விடம் தொலை-நோக்கு திட்டம் இல்லை. புது கட்சிகள் நிறைய உருவாகின்றன. அ.தி.மு.க., குடும்பத்தில் உள்ள மகன், மகள், பேரன் உள்ளிட்டோர், அந்த கட்சியில் சேராமல் இருக்க
செய்ய வேண்டும். தங்கள் குடும்பத்தினரை, அ.தி.மு.க.,வில் உறுப்பினராகவும், கட்சி பணிக்கும் கொண்டுவர வேண்டும். மூத்த நிர்வாகிகள்,
இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், முன்னாள் எம்.எல்.ஏ., மாதேஸ்வரன், ஒன்றிய செயலர் மேற்கு ரஞ்சித்குமார், கிழக்கு சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.'ஆட்சி இப்படி தான்'அன்பழகன், மின் கட்டண உயர்வு குறித்து பேசியபோது மின்-சாரம் துண்டிக்கப்பட்டது. 5 நிமிடத்துக்கு பின் மின்சாரம் வந்த பின் பேச்சை
தொடங்கினார். அப்போது, ''தி.மு.க., ஆட்சியின் நிலை இப்படி தான் உள்ளது,'' என்றார்.