ADDED : ஜூலை 10, 2026 05:10 AM
பனமரத்துப்பட்டி:பனமரத்துப்பட்டி,
தும்பல்பட்டி ஊராட்சி கூட்டாறில், குடிநீர் வடிகால் வாரிய நீர் உந்து
நிலையம் உள்ளது. அங்கிருந்து, 8 மோட்டார் மூலம் கம்மாளப்பட்டி,
தும்பல்பட்டி ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர், 'பம்பிங்'
செய்யப்படுகிறது.
அனைத்து மோட்டார்களையும் இயக்க மின்
பற்றாக்குறை ஏற்படுவதால், குடிநீர் வினியோகத்தில் சிக்கல்
ஏற்பட்டது. இதுகுறித்து நேற்று நம் நாளிதழில் செய்தி வெளியானது.
அதன் எதிரொலியாக, குடிநீர் வடிகால் மற்றும் மின் வாரிய அலுவலர்கள்,
நீர் உந்து நிலையத்தில் கூட்டாக ஆய்வு மேற்கொண்டனர்.இதுகுறித்து
மின் வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'ஒரு மோட்டார் இயக்க அனுமதி
பெற்று, கூடுதல் மோட்டார் இயக்கப்படுகிறது. அனுமதி பெறப்பட்ட
கிலோவாட் மின்சாரத்தை விட, 3 மடங்கு அதிகம் பயன்படுத்துவதால்
பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கூடுதலாக எத்தனை கிலோ வாட்
மின்சாரம் தேவைப்படுகிறதோ, அதற்கு விண்ணப்பம் அளித்து கட்டணம்
செலுத்த வேண்டும். அதற்கேற்ப மின்மாற்றி, மாற்றி அமைக்கப்படும். பின்
மின் பற்றாக்குறை இருக்காது என, குடிநீர் வடிகால் வாரிய
அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது' என்றனர்.
