/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கோஷ்டி பிரச்னைகளை தவிர்க்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
/
கோஷ்டி பிரச்னைகளை தவிர்க்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
கோஷ்டி பிரச்னைகளை தவிர்க்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
கோஷ்டி பிரச்னைகளை தவிர்க்க அ.தி.மு.க.,வினருக்கு அறிவுரை
ADDED : டிச 01, 2024 01:13 AM
ஆத்துார், டிச. 1-
ஆத்துார் அருகே, கீரிப்பட்டி டவுன் பஞ்சாயத்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. பேரூர் செயலர் பொன்னம்மாள் தலைமை வகித்தார். அதில், புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசியதாவது:
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., பொய் வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்தது. 2026ல் மீண்டும் பொய் வாக்குறுதி மற்றும் பணம் கொடுத்து ஓட்டுகளை பெற்று, 200 தொகுதிகளில் வெற்றி பெற, தி.மு.க., முயற்சிக்கிறது. அதனால், 2011ல் நடந்த தேர்தலை போன்று, தி.மு.க.,வை எதிர்க்கட்சியாக கூட சட்டசபைக்கு வரமுடியாதபடி, 2026ல் அ.தி.மு.க.,வினர் தேர்தல் பணி மேற்கொள்ள வேண்டும். அதற்கு கட்சியினர், ஒற்றுமையுடன் இருந்தால் தான் ஆட்சியை பிடிக்க முடியும். கோஷ்டி பிரச்னைகளை தவிர்த்து, தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.