/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கூடுதல் ஓட்டுகளை பெற தி.மு.க.,வினருக்கு அறிவுரை
/
கூடுதல் ஓட்டுகளை பெற தி.மு.க.,வினருக்கு அறிவுரை
ADDED : நவ 09, 2024 01:09 AM
ஆத்துார், நவ. 9-
ஆத்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆத்துார், நரசிங்கபுரம் நகரம், கீரிப்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் பேரூர், பெத்தநாயக்கன்பாளையம், ஆத்துார் ஒன்றியங்கள் சார்பில், தி.மு.க., பாக முகவர்கள் கூட்டம், ஆத்துாரில் நேற்று நடந்தது. அத்தொகுதி பொறுப்பாளரான, கடலுார் மேற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கணேஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''புது வாக்காளர்களை சேர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவர்களால், தி.மு.க.,வுக்கு கூடுதல் ஓட்டுகள் கிடைக்கும். 50க்கும் குறைவான ஓட்டுகளில் தோல்வி அடைந்த ஓட்டுச்சாவடிகளில் கூடுதல் ஓட்டுகளை பெற, பாக முகவர்கள், கட்சியினர் தேர்தல் பணியை தீவிரப்படுத்த வேண்டும்,'' என்றார்.
இதில் மாவட்ட அவைத்தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்ரீராம், முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரை, நகர செயலர்களான, ஆத்துார் பாலசுப்ரமணியம், நரசிங்கபுரம் வேல்முருகன், ஆத்துார் ஒன்றிய செயலர் செழியன், பேரூர் செயலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.