sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மதியத்துக்கு பின் நிரம்பியது கூட்ட அரங்கம்

/

மதியத்துக்கு பின் நிரம்பியது கூட்ட அரங்கம்

மதியத்துக்கு பின் நிரம்பியது கூட்ட அரங்கம்

மதியத்துக்கு பின் நிரம்பியது கூட்ட அரங்கம்


ADDED : ஜன 22, 2024 10:41 AM

Google News

ADDED : ஜன 22, 2024 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* 'நீட்' தேர்வுக்கு எதிராக, தி.மு.க., இளைஞரணி சார்பில் சேகரிக்கப்பட்ட, 85 லட்சம் கையெழுத்து தபால் அட்டைகள், மாநாடு நுழைவு பகுதியில் கண்ணாடி பெட்டியில் பார்வைக்கு வைத்திருந்தனர்.

* மாநாட்டு மேடை பின்புறம், வி.ஐ.பி.,க்கள் உணவு கூடம் அருகே, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இல்லம் போன்ற ஒரு கட்டடத்தை ஏற்படுத்தியிருந்தனர். அதற்கு, 'அஞ்சுகம், மு.கருணாநிதி' என, வாயில் இரு புறங்களுக்கு பெயர் பலகை வைத்திருந்தனர். அங்கு முதல்வர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர், வி.ஐ.பி.,க்கள் ஓய்வெடுத்தனர்.

* தொண்டர்களுக்கு போடப்பட்ட அனைத்து இருக்கைகளிலும், 1 லிட்டர் தண்ணீர் பாட்டில், ஒரு மஞ்சப்பையில் கேக், பிரட், ஜாம், பிஸ்கட், மிக்சர் அல்லது ஒரு முறுக்கு பாக்கெட் தொகுப்பை வைத்திருந்தனர்.

* மாநாடு தொடங்கிய, 9:15 மணிக்கு கூட்டம் குறைவாக இருந்த நிலையில், 11:00 மணிக்கு மேல் அதிகளவில் கட்சியினர் வரத்தொடங்கினர். 12:00 மணிக்கு மேல் கூட்ட அரங்கம் முழுமையானது. மாநாட்டு பந்தலின் கிழக்கு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அசைவ உணவு கூடப்பகுதியில் மட்டன் பிரியாணியை வாங்க, சில நேரங்களில் தள்ளுமுள்ளு காணப்பட்டது. பலரும், 'பார்சல்' ஆக கட்டியும் பெற்றுச்சென்றனர்.

* மாநாட்டு நிகழ்வுக்கு இடையே, 'திராவிட இயக்க வரலாறு' என்ற வீடியோ காட்சி, அமைச்சர் உதயநிதிக்கு, 'பேக்ரவுண்ட்' பாடல் ஒலிபரப்பினர். அவற்றில் பிரதமர் மோடி தலையில் கை வைத்தது, 'ஜோக்கர்' வடிவில் படங்கள், அ.தி.மு.க.,வின் முன்னாள் முதல்வர்களான, இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., உள்ளிட்ட அப்போதைய அமைச்சர்கள், ஜெயலலிதா, சசிகலா காலில் விழுந்தது, ஜெயலலிதாவின் வாகன டயரை கும்பிட்ட படங்களை ஒளிபரப்பினர்.






      Dinamalar
      Follow us