/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
/
விவசாய தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 31, 2025 02:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், சங்ககிரி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சேலம் மாவட்ட செயலர் சேகர் தலைமை வகித்தார். அதில், ஊரக வேலை உறுதி திட்டத்தில், 100 நாள் வேலைக்கு அட்டை வைத்-துள்ள அனைவருக்கும் பணி வழங்குதல்; அவர்களுக்கு நிலு-வையில் உள்ள சம்பளத்தை உடனே வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க சேலம் மாவட்ட செயலர் ராமமூர்த்தி, சங்ககிரி தாலுகா தலைவர் ராஜேந்திரன், செயலர் பழனிசாமி, மா.கம்யூ., சங்ககிரி தாலுகா செயலர் ஆறுமுகம்உள்பட பலர் பங்கேற்றனர்.