/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தகைசால் பள்ளி மாணவருக்கு இன்று முதல் ஏ.ஐ., பயிற்சி
/
தகைசால் பள்ளி மாணவருக்கு இன்று முதல் ஏ.ஐ., பயிற்சி
தகைசால் பள்ளி மாணவருக்கு இன்று முதல் ஏ.ஐ., பயிற்சி
தகைசால் பள்ளி மாணவருக்கு இன்று முதல் ஏ.ஐ., பயிற்சி
ADDED : டிச 26, 2024 02:39 AM
சேலம்: தமிழகத்தில், 28 மாவட்டங்களில், 'ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸ்' எனும் தகைசால் பள்ளிகள் செயல்படுகின்றன. அதில், சேலம் மாவட்டத்தில் குகை நகரவை மகளிர் மேல்நிலைப்பள்ளியும் அடங்கும். அப்பள்ளிகளில் படிக்கும், 6, 7, 8, 9, பிளஸ் 1 வகுப்பு
மாணவர்களுக்கு, 'இளம் விஞ்ஞானிகள்' தலைப்பில், 5 நாட்கள் பயிற்சி முகாம் நடத்தப்படும். அதன்படி நடப்பாண்டு, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு, 5 நாள் பயிற்சி, சேலம் மாவட்டம் ஏற்காடு, செக்ரட் ஹார்ட் பள்ளியில், இன்று முதல், வரும், 30 வரை நடக்கிறது. இதில், 28 மாவட்டங்-களில் இருந்து, 115 மாணவியர், 25 மாணவர் பங்கேற்கின்றனர். ஏ.ஐ., தொழில்நுட்பம், கணினி சார்ந்த பயிற்சி அளிக்கப்படுகிறது.