/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தாலிக்கு தங்கத்துடன் பட்டு சேலை அ.தி.மு.க., - முன்னாள் அமைச்சர் தகவல்
/
தாலிக்கு தங்கத்துடன் பட்டு சேலை அ.தி.மு.க., - முன்னாள் அமைச்சர் தகவல்
தாலிக்கு தங்கத்துடன் பட்டு சேலை அ.தி.மு.க., - முன்னாள் அமைச்சர் தகவல்
தாலிக்கு தங்கத்துடன் பட்டு சேலை அ.தி.மு.க., - முன்னாள் அமைச்சர் தகவல்
ADDED : ஆக 08, 2025 01:29 AM
பனமரத்துப்பட்டி, அ.தி.மு.க., வர்த்தகர் அணி சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து, பனமரத்துப்பட்டி, அமானி கொண்டலாம்பட்டியில் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. சேலம் புறநகர் மாவட்ட, வர்த்தகர் அணி செயலர் மகதேஷ்சந்திரன் தலைமை வகித்தார். பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய செயலர் ஜெகநாதன் வரவேற்றார்.
ஒன்றிய செயலர்களான, பனமரத்துப்பட்டி கிழக்கு பாலச்சந்திரன், வீரபாண்டி மேற்கு வருதராஜ், வீரபாண்டி கிழக்கு வெங்கடேசன், சேலம் கிழக்கு செல்வபிரகாஷ் முன்னிலை வகித்தனர்.
வீரபாண்டி எம்.எல்.ஏ., ராஜமுத்து பேசுகையில், ''அமானி கொண்டலாம்பட்டியில், 1993ல், 250 பேருக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. தற்போது அதை, தி.மு.க.,வினர் ரத்து செய்துவிட்டு, 75 பேருக்கு மட்டும் வழங்கியுள்ளனர். இது மட்டும் செல்லுமா?,'' என்றார்.
சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், ''தி.மு.க.,வுக்கு, 7 அமாவாசை தான். அடுத்து, இ.பி.எஸ்., ஆட்சி தான்,'' என்றார்.
மாநில இலக்கிய அணி செயலர், முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், ''சேலம் அ.தி.மு.க.,வின் கோட்டை. 2026ல், 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தாலிக்கு தங்கத்துடன் பட்டு சேலை வழங்குவதாக, இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்,'' என்றார்.
தொடர்ந்து அமைப்பு செயலர் செம்மலை பேசினார். ஓமலுார் எம்.எல்.ஏ., மணி, மாவட்ட அம்மா பேரவை தலைவர் தமிழ்மணி, மாவட்ட அம்மா பேரவை துணை செயலர் சித்துராஜ், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலர் பழனிசாமி, ஒன்றிய துணை செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.