/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய கருத்தரங்கம் தொடக்கம்
/
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய கருத்தரங்கம் தொடக்கம்
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய கருத்தரங்கம் தொடக்கம்
தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில் அகில இந்திய கருத்தரங்கம் தொடக்கம்
ADDED : பிப் 24, 2024 03:34 AM
சேலம்: இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியர்ஸ் இந்தியா, தமிழ்நாடு ஸ்டேட் சென்டர், சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் மற்றும் சோனா கல்லுாரி இணைந்து, 'இந்தியாவில் வெள்ள மேலாண்மை மற்றும் தணிப்பு உத்திகள் வலிமையை மேம்படுத்துதல்' தலைப்பில் அகில இந்திய இரு நாள் கருத்தரங்கு, தியாகராஜர் பாலிடெக்னிக்கில் நேற்று தொடங்கியது. பொறியியல், பாலிடெக்னிக் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு நடந்த கருத்தரங்கின் தொடக்க விழாவுக்கு சோனா கல்வி குழும தலைவர் வள்ளியப்பா தலைமை வகித்தார். ஆந்திர பிரதேசம் ஜல் சக்தி அமைச்சகம், நதி மேம்பாடு, கங்கை புனரமைப்பு, நீர்வளத்துறை, கோதாவரி நதி மேலாண் வாரியம், உறுப்பினர் செயலர் அழகேசன் தொடங்கிவைத்து பேசினார்.
தொடர்ந்து தியாகராஜர் பாலிடெக்னிக் முதல்வர் கார்த்திகேயன், சோனா தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் பேசினர். பின், 110-க்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகளை, பேராசிரியர்கள், மாணவர்கள் சமர்ப்பித்தனர். இதன் தொகுப்பு வெளியிடப்பட்டது. தமிழ்நாடு ஸ்டேட் சென்டரின் கவுரவ செயலர் கோகுல், கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர் லோகநாதன், கருத்தரங்கு ஏற்பாடுகளை செய்தனர். சென்டரின் தொழில்நுட்ப குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இன்றும் கருத்தரங்கு நடக்கிறது.