/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அண்ணாதுரை நினைவு தினம்: தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
/
அண்ணாதுரை நினைவு தினம்: தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
அண்ணாதுரை நினைவு தினம்: தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
அண்ணாதுரை நினைவு தினம்: தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
ADDED : பிப் 04, 2024 09:57 AM
சேலம்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின், 55வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி தி.மு.க.,வின் சேலம் மத்திய மாவட்டம் சார்பில் மவுன ஊர்வலம் நடந்தது. எம்.எல்.ஏ., ராஜேந்திரன் தலைமை வகித்தார். ஈ.வெ.ரா., சிலை முன் தொடங்கிய ஊர்வலம், திருவள்ளுவர் சிலை வழியே, பழைய பஸ் ஸ்டாண்டில் உள்ள அண்ணாதுரை சிலையை அடைந்தது. அங்கு சிலைக்கு மாலை அணிவித்து, கட்சியினர் மரியாதை செலுத்தினர். அவைத்தலைவர் சுபாஷ், பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், மாவட்ட துணை செயலர் குமரவேல், மாநகர செயலர் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் மணி உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் அ.தி.மு.க., சார்பில், மாநகர் மாவட்ட செயலர் வெங்கடாஜலம், அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்தார். அவைத்தலைவர் பன்னீர்செல்வம், தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., பாலசுப்ரமணியன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன், பொருளாளர் வெங்கடாசலம், பகுதி செயலர்கள் உள்பட பல்வேறு அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
ஆத்துார், கோட்டையில், அண்ணாதுரை சிலைக்கு, அ.தி.மு.க., சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் தலைவாசல், கெங்கவல்லி, வீரகனுார், தம்மம்பட்டி பகுதிகளில், அண்ணாதுரை சிலை, உருவ படத்துக்கு மாலை அணிவித்தனர். இதில் எம்.எல்.ஏ.,க்களான, ஆத்துார் ஜெயசங்கரன், கெங்கவல்லி நல்லதம்பி, ஆத்துார் நகர செயலர் மோகன், தலைவாசல் ஒன்றிய குழு தலைவர் ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாதேஸ்வரன், சின்னதம்பி உள்பட பலர் பங்கேற்றனர்.
அதேபோல் ஆத்துார் புது பஸ் ஸ்டாண்ட், நரசிங்கபுரம், தலைவாசல், கெங்கவல்லி பகுதிகளில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, தி.மு.க., சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது. ஆத்துார் நகர செயலர் பாலசுப்ரமணியம், நகராட்சி தலைவர் நிர்மலாபபிதா, ஆத்துார் ஒன்றிய செயலர் செழியன், நரசிங்கபுரம் நகர செயலர் வேல்முருகன், நகராட்சி தலைவர் அலெக்சாண்டர், தலைவாசல் ஒன்றிய செயலர் மணி, தெற்கு ஒன்றிய செயலர் அழகுவேல், கெங்கவல்லி பேரூர் செயலர் பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும் பனமரத்துப்பட்டி, மல்லுாரில், தி.மு.க.,வினரும், தாரமங்கலத்தில் அ.தி.மு.க.,வினரும், அண்ணாதுரை நினைவு தினம் அனுசரித்தனர்.