ADDED : ஆக 13, 2026 02:57 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி சார்--பதிவாளர்- அலுவலகத்தில், ஜூலை 7ல், கோவை மாவட்டம், கொமாரபாளையத்தை சேர்ந்த மணி, 64, பழனி டி.கே.என்.புதுார் கந்தசாமி, 87, என்பவருக்கு, மேற்கு ஆயக்குடியில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை, 9 லட்சம் ரூபாய்க்கு கிரயம் செய்து கொடுத்தார்.
இந்த பத்திரப்பதிவை, பழனி தண்டபாணி மடம் நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்து கொடுத்து சிக்கிய, சார்-பதி-வாளர் ஜஸ்டின் மணிகண்டனே மேற்கொண்டார். பத்திரப்பதிவு நடந்த 4 ஏக்கர் நிலத்தில், 2.4 ஏக்கர் ஆயக்குடி கன்னிகா பர-மேஸ்வரி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது என, தகவல் பர-வியது. இதுகுறித்து, ஆய்வு செய்த பத்திரப்பதிவு துறை அதிகா-ரிகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் பத்திரப்பதிவு நடந்-ததை கண்டறிந்தனர்.இதுகுறித்து, தற்போதைய பழனி சார்-பதிவாளர் ஈஸ்வரி, ஆயக்-குடி போலீசில் புகார் அளித்தார். அதன்படி, ஜஸ்டின் மணி-கண்டன், மணி, கந்தசாமி மீது போலீசார் வழக்கு பதிந்தனர். நேற்று இரவு மணியை கைது செய்த போலீசார், கந்தசாமியை தேடுகின்றனர்.
இதற்கிடையே, தண்டபாணி சுவாமி மடத்தின் நிலம் மோசடி-யாக பத்திரப்பதிவு செய்த வழக்கில், ஜஸ்டின் மணிகண்டன், பத்-திர எழுத்தர் ஜெயப்பிரகாஷ் ஜாமின் மனுக்களை நீதிமன்றம் தள்-ளுபடி செய்து உத்தரவிட்டது.
