சுகவனேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மீண்டும் போராட்டம்
சுகவனேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மீண்டும் போராட்டம்
ADDED : நவ 06, 2026 01:38 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம் சுகவனேஸ்வரர் கோவிலில், கடந்த, 2 இரவு அர்த்தஜாம பூஜை செய்யும் போது, கிச்சிப்பாளையத்தை சேர்ந்த, 15 வயது சிறுமி, அவரது தாயுடன் வந்து பக்தி பாடல்களை பாடினார். இது, மற்ற பக்தர்களுக்கு இடையூறாக இருந்ததால் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் தகராறு ஏற்பட்டு, பக்தர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.இப்பிரச்னை இரு நாட்களாக நீடித்த நிலையில், கோவில் உதவி கமிஷனர் ரமணிகாந்தன் புகார்படி, போலீசார் சிறுமி, அவரது தாய் மீது வழக்குப்பதிந்தனர். இந்நிலையில் நேற்றிரவும், அச்சிறுமி வந்து பாடினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பக்தர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். போலீசார் வந்து சமாதானப்படுத்தி சிறுமி, பக்தர்களை அனுப்பி வைத்தனர்.
