/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
துணை சுகாதார நிலையம் கட்ட எதிர்ப்பு பாதை கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
/
துணை சுகாதார நிலையம் கட்ட எதிர்ப்பு பாதை கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
துணை சுகாதார நிலையம் கட்ட எதிர்ப்பு பாதை கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
துணை சுகாதார நிலையம் கட்ட எதிர்ப்பு பாதை கேட்டு அதிகாரிகளுடன் வாக்குவாதம்
ADDED : அக் 08, 2025 01:37 AM
பனமரத்துப்பட்டி, துணை சுகாதார நிலையம் கட்ட எதிர்ப்பு தெரிவித்த மக்கள், அங்கு பாதை கேட்டு, அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
பனமரத்துப்பட்டி, குரால்நத்தம் ஊராட்சி கோண மடுவில் துணை சுகாதார நிலைய கட்டடம் சேதமாகி, 10 ஆண்டுக்கு மேலாக பூட்டி வைக்கப்பட்டது. தற்போது, ஊரக வளர்ச்சித்துறை மூலம், புது கட்டடம் கட்ட, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. கடந்த மாதம் பழைய கட்டடத்தை அகற்றி, புது கட்டடத்துக்கு பூமி பூஜை போடப்பட்டது.
ஆனால் பழைய கட்டடம் இருந்த இடத்தில் புது கட்டடம் கட்ட, அருகே இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் பணி தொடங்கப்படவில்லை. மேலும் அந்த இடத்தில் டிராக்டரை நிறுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பனமரத்துப்பட்டி ஒன்றிய கமிஷனர் கார்த்திகேயன் உள்ளிட்டோர், நேற்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களிடம் பேச்சு நடத்தினர்.
அப்போது சுகாதார நிலைய பின்புறம் உள்ள வீடுகள், தோட்டத்திற்கு சென்று வர, அகலமான பாதை விட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு, 18 அடி அகலத்துக்கு பாதை விடப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதை ஏற்காமல், ஒரு குடும்பத்தினர் வாக்குவாதம் செய்து, அதிகாரிகளை தாக்க முயன்றனர். பின் பனமரத்துப்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் வந்து விசாரித்தனர். போலீசாரின் எச்சரிக்கைக்கு பின் அமைதி ஏற்பட்டது. தொடர்ந்து சுகாதார நிலையம் கட்ட, துாண்கள் அமைக்கும் பணிக்கு பள்ளம் தோண்டும் பணி நடந்தது.