/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
'இடைப்பாடி நகராட்சிக்கு ரூ.63 கோடியில் திட்டப்பணி'
/
'இடைப்பாடி நகராட்சிக்கு ரூ.63 கோடியில் திட்டப்பணி'
'இடைப்பாடி நகராட்சிக்கு ரூ.63 கோடியில் திட்டப்பணி'
'இடைப்பாடி நகராட்சிக்கு ரூ.63 கோடியில் திட்டப்பணி'
ADDED : அக் 08, 2025 01:37 AM
இடைப்பாடி, சேலம் மாவட்டம் இடைப்பாடி நகராட்சியில், புது குடிநீர் திட்டப்பணி தொடக்க விழா நேற்று நடந்தது. கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்தார். அதில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில், 10.75 கோடி ரூபாய் மதிப்பில், திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:
முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூன், 12ல் சேலம் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில், இடைப்பாடி நகராட்சிக்கு, 12 கோடி ரூபாய் மதிப்பில் திட்டங்களை வெளியிட்டார்.
நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை, 58,460. இதற்கேற்ப கலைஞர் மேம்பாட்டு திட்டத்தில், 10.75 கோடி ரூபாய் மதிப்பில், குடிநீர் விரிவாக்க பணிக்கு பூஜை போடப்பட்டுள்ளது.
கடந்த, 4 ஆண்டுகளில், நகராட்சியில் பூங்கா, சாலை, மழைநீர் வடிகால், கழிப்பிடம், புது பஸ் ஸ்டாண்ட், அங்கு கூடுதல் கடைகள், கழிவுநீர் வாகனம், நகர்புற ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்கள், ஆடு வதைக்கூடம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், பள்ளி, நீர்நிலை மேம்பாடு, குடிநீர் வினியோகம், திடக்கழிவு மேலாண் திட்டப்பணிகள், நகர்புற நலவாழ்வு மையம், முதல்வரின் காலை உணவு திட்டம், தெருவிளக்கு உள்பட, 215 பணிகள், 63 கோடி ரூபாயில் நடந்துள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
சேலம் எம்.பி., செல்வகணபதி, டி.ஆர்.ஓ., ரவிக்குமார், இடைப்பாடி நகராட்சி தலைவர் பாஷா, நகராட்சி கமிஷனர் கோபிநாத் உள்பட பலர் பங்கேற்றனர்.