/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரூ.7 கோடியில் குடிநீர் குழாய் மறுசீரமைப்பு தினமும் 63 லட்சம் லிட்டர் வழங்க ஏற்பாடு

ADDED : அக் 08, 2025 01:37 AM
மேட்டூர், பி.என்.பட்டி, வீரக்கல்புதுார் டவுன் பஞ்சாயத்துக்கு, மேட்டூர் அடுத்த தொட்டில்பட்டி காவிரி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து தினமும், 44 லட்சம் லிட்டர் குடிநீர், மக்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
அதற்காக பிரதான மேல்நிலை தொட்டிகளுக்கு குடிநீர் குழாய் அமைத்து, 25 ஆண்டுக்கு மேல் ஆகிறது. அந்த குழாய்களில் ஆங்காங்கே அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணானது. இதுகுறித்து இரு டவுன் பஞ்சாயத்துகளுக்கும் குடிநீர் எடுத்துச்செல்லும், 19 கி.மீ., நீள குழாய்களை மறுசீரமைத்து, 2,054 வரை, தினமும், 63 லட்சம் லிட்டர் குடிநீர் வினியோகிக்க, தமிழக குடிநீர் வடிகால் வாரியம் முடிவு செய்தது.
தொடர்ந்து குடிநீர் குழாய்களை, 7.94 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்வதற்கான பூமி பூஜை, தொட்டில்பட்டியில் நேற்று நடந்தது. சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தலைமை வகித்து பணியை தொடங்கிவைத்து பேசுகையில், ''குடிநீர் குழாய் மறுசீரமைப்பு பணி மட்டுமின்றி, நீரேற்று நிலையங்களுக்கு புது மோட்டார்கள் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
சேலம் கலெக்டர் பிருந்தாதேவி, சேலம் எம்.பி., செல்வகணபதி, பா.ம.க.,வின், மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், பி.என்.பட்டி டவுன் பஞ்சாயத்து தலைவர் பொன்னுவேல் உள்பட பலர் பங்கேற்றனர்.