/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
டாஸ்மாக் சுமை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
/
டாஸ்மாக் சுமை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் சுமை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் சுமை தொழிலாளர்கள் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 08, 2025 01:38 AM
பனமரத்துப்பட்டி, மல்லுார் அருகே சந்தியூரில், சேலம் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் மற்றும் கிடங்கு செயல்படுகிறது. கிடங்கில் மது பெட்டிகளை வாகனங்களில் இருந்து இறக்கி வைத்தல், டாஸ்மாக் கடைகளுக்கு வாகனங்களில் ஏற்றி அனுப்புதல், கடைகளில் இறக்கி வைத்தல் உள்ளிட்ட பணியில், 100க்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், தீபாவளிக்கு போனஸ் கேட்டு, கிடங்கு முன் நேற்று, சி.ஐ.டி.யு., டாஸ்மாக் சுமை துாக்கும் தொழிலாளர் சங்கத்தலைவர் சிவகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின் வழக்கமான பணிக்கு சென்றனர்.
இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், '15 ஆண்டாக பெட்டி துாக்கும் எங்களுக்கு சம்பளம் இல்லை. ஒரு பெட்டியை ஏற்றி, இறக்கினால், குறைந்தபட்ச கூலி தருகின்றனர். அதனால் தீபாவளிக்கு போனஸ் வழங்க வேண்டும்' என்றனர்.
டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், 'மது பெட்டிகளை கடைகளுக்கு கொண்டு சேர்க்க டெண்டர் எடுத்தவர்களிடம் போனஸ் கேட்டு, 10 நிமிடம் கோஷம் போட்டு, வேலைக்கு வந்து விட்டனர்' என்றனர்.