/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஆர்.ஐ.,யுடன் வாக்குவாதம்; மயங்கிய வி.ஏ.ஓ., 'அட்மிட்'
/
ஆர்.ஐ.,யுடன் வாக்குவாதம்; மயங்கிய வி.ஏ.ஓ., 'அட்மிட்'
ஆர்.ஐ.,யுடன் வாக்குவாதம்; மயங்கிய வி.ஏ.ஓ., 'அட்மிட்'
ஆர்.ஐ.,யுடன் வாக்குவாதம்; மயங்கிய வி.ஏ.ஓ., 'அட்மிட்'
ADDED : டிச 06, 2024 07:20 AM
தலைவாசல்: சேலம் மாவட்டம் தலைவாசல், வெள்ளையூர் வி.ஏ.ஓ., கீதா. நேற்று காலை, 11:00 மணிக்கு, வீரகனுாரில் உள்ள ஆர்.ஐ., அலுவலகம் சென்றார். அங்கு, ஆர்.ஐ., ஜெயாவுக்கும், கீதாவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மன உளைச்சலில் அங்கிருந்து வெளியே வந்த கீதா மயங்கி விழுந்தார்.
மற்ற வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள், அவரை மீட்டு, அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். வீரகனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.இதுகுறித்து தலைவாசல் தாசில்தார் பாலாஜி கூறுகையில், ''வருவாய்த்துறை பணி தொடர்பாக, ஆர்.ஐ., கேள்வி எழுப்பியுள்ளார். வாக்குவாதம் இல்லை. உடல் நிலை சரியின்றி இருந்த வி.ஏ.ஓ.,வுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.