/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கைப்பற்றப்பட்ட மரங்கள்ஏலம் விடுவதற்கு ஏற்பாடு
/
கைப்பற்றப்பட்ட மரங்கள்ஏலம் விடுவதற்கு ஏற்பாடு
ADDED : ஏப் 22, 2025 01:14 AM
பனமரத்துப்பட்டி:சேலம் மாநகராட்சிக்கு சொந்தமான பனமரத்துப்பட்டி ஏரி, 2,137 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த, 19ல், குரால்நத்தம் பிடாரி அம்மன் கோவில் வழியாக ஏரிக்குள் சென்று, பொக்லைன் மூலம் உயிரோடு இருந்த பச்சை மரங்களை சிலர் வேரோடு பிடுங்கினர்.
சேலம் மாநகராட்சி அதிகாரிகள் வந்ததால், மரங்களை விட்டு விட்டு, பொக்லைன் வாகனத்துடன் சென்று விட்டனர். இது குறித்து, மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை நடத்தி, பனமரத்துப்பட்டி போலீசில் புகராளித்தனர். நேற்று, வேரோடு சாய்க்கப்பட்ட மரங்களை, சேலம் மாநகராட்சி ஊழியர்கள் இரண்டு வாகனங்களில் ஏற்றி, ஏரி அடிக்கரை பங்களா பகுதிக்கு கொண்டு வந்து, அடுக்கி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட, ஐந்து டன்னுக்கும் மேற்பட்ட மரங்களை ஏலம் விடுவதற்கு, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.