ADDED : டிச 31, 2024 07:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம் வீராணம் அடுத்த பள்ளிபட்டியை சேர்ந்த டிரைவர் கிரிபாலாஜி, 19. இவர் நேற்று மாலை, 5:30 மணியளவில், அங்குள்ள கோவிலில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அதனை, அவரது குடும்பத்தார் கண்டித்துள்ளனர்.
அதனால் ஆவேசமடைந்த வாலிபர், அங்குள்ள டிராக்டரில் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து, தன்மீது ஊற்றிக்கொண்டு, அவராகவே தீ வைத்து கொண்டார். அங்கிருந்தவர்கள் மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வீராணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.