/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் சேலத்தில் 5வது கிளை திறப்பு
/
அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் சேலத்தில் 5வது கிளை திறப்பு
அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் சேலத்தில் 5வது கிளை திறப்பு
அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் சேலத்தில் 5வது கிளை திறப்பு
ADDED : ஆக 05, 2025 01:06 AM
சேலம், சேலத்தில், அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் 5வது கிளை, திறப்பு விழா நேற்று நடந்தது.
பெரம்பலுாரை தலைமையிடமாக கொண்ட அஸ்வின் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் நிறுவனம், தமிழகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட கிளைகளில் செயல்பட்டு வருகிறது. சேலத்தில், ராமகிருஷ்ணா ரோடு, அக்ரஹாரம், பேர்லேண்ட்ஸ், குகை ஆகிய நான்கு இடங்களில் கிளைகள் செயல்பட்டு வரும் நிலையில், 5வது கிளையாக, ஓமலுார் பிரதான சாலையில், போத்தீஸ் அருகில், அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. அஸ்வின் குழும தலைவர் கணேசன், நிர்வாகிகள் ரங்கராஜ், செல்வகுமாரி, அஸ்வின், சிபி மோகன், நிஷா சிபி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பதிவாளர் நாகப்பன், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 5வது கிளையை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.
திறப்பு விழா சலுகையாக, ஆக., 7 வரை, இக்கிளையில் வாங்கும் அனைத்து பொருட்களுக்கும், 40 சதவீதம் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.