/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பி.வி., மெட்ரிக் பள்ளி சார்பில் முதியோர் இல்லங்களுக்கு உதவி
/
பி.வி., மெட்ரிக் பள்ளி சார்பில் முதியோர் இல்லங்களுக்கு உதவி
பி.வி., மெட்ரிக் பள்ளி சார்பில் முதியோர் இல்லங்களுக்கு உதவி
பி.வி., மெட்ரிக் பள்ளி சார்பில் முதியோர் இல்லங்களுக்கு உதவி
ADDED : அக் 19, 2025 02:39 AM
சேலம்: ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்படி, தொடர்ந்து, 3ம் ஆண்டாக, தீபாவளியை முன்னிட்டு, சேலம், சிவதாபுரம், பி.வி.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நிதி திரட்டி உதவி வருகின்றனர். அதன்-படி இந்த ஆண்டு, மாணவர்கள், பெற்றோர், பள்ளி நிர்வாகம், ஆசிரியர்களிடம் இருந்து, 1.25 லட்சம் ரூபாய் சேகரிக்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்கள், ஆசிரியர்கள், கோரிமேட்டில் உள்ள காருண்யா இல்லம்; குரங்குச்சாவடி நம்பிக்கை வாசல்; நெத்திமேடு லிட்டில் ஹார்ட்ஸ்; அம்-மாபேட்டை மைண்ட் கேர்; அன்னதானப்பட்டி அன்னை லைப் டிரஸ்ட்; உத்தம
சோழபுரம் லைப் டிரஸ்ட் ஆகிய இல்லங்களுக்கு சென்று, தலா, 20,000 ரூபாய் மதிப்பில், இரு மாதங்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை, சுகாதார பொருட்கள், அடிப்படை பிளாஸ்டிக் பயன்பாட்டு பொருட்களை வழங்கினர்.
அரிசிபாளையம், அம்மாபேட்டையில் உள்ள, ஐ.இ., - என்.ஆர்.எஸ்.டி.சி., பள்ளிகளில், மாணவர்
களுக்கு தேவையான பொருட்கள், பாலமந்திர் காமராஜர், உதவும் கரங்கள், அன்பின் கரங்கள் ஆகிய அறக்கட்டளைகளுக்கு நிதியு-தவி வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் மணிகண்டன், பங்களிப்பு வழங்கிய பெற்றோர்
உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.