/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
இருளில் ஏ.டி.எம்., வாடிக்கையாளர் அவதி
/
இருளில் ஏ.டி.எம்., வாடிக்கையாளர் அவதி
ADDED : நவ 16, 2024 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இருளில் ஏ.டி.எம்.,
வாடிக்கையாளர் அவதி
மகுடஞ்சாவடி, நவ. 16-
இளம்பிள்ளை, கே.கே.நகர் மின்வாரிய அலுவலகம் அருகே ஸ்டேட் பேங்க் நிர்வாகத்தின், ஏ.டி.எம்., மையம் உள்ளது. அதன் உட்புறம் உள்ள மின்விளக்கு பழுதாகி, இரு மாதங்களாக எரியவில்லை. அதனால் பணம் எடுக்க வரும் வாடிக்கையாளர்கள், மொபைல் போனில் உள்ள விளக்கு வெளிச்சத்தில் பணம் எடுத்துச்செல்கின்றனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிர்வாகத்துக்கு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அசம்பாவித சம்பவம் ஏற்படும் முன், வங்கி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க, வாடிக்கையாளர்கள்
வலியுறுத்தினர்.