/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ஹெச்.எம்., மீது தாக்குதல் விவசாயிக்கு 'காப்பு'
/
ஹெச்.எம்., மீது தாக்குதல் விவசாயிக்கு 'காப்பு'
ADDED : மே 04, 2025 01:27 AM
கெங்கவல்லி:தலைவாசல், சாத்தப்பாடியை சேர்ந்தவர் பரமேஸ்வரி, 55. அதே ஊரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார். இவரது கணவர் திருநாவுக்கரசு, அரசு பஸ் டிரைவராக பணிபுரிகிறார். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த, உறவினரான விவசாயி மாரிமுத்து, 47, என்பவருக்கும் நிலப்பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது.
கடந்த ஏப்., 27 மாலை, 5:00 மணிக்கு, பரமேஸ்வரி வீட்டுக்கு வந்த மாரிமுத்து, தகாத வார்த்தையில் திட்டியுள்ளார். தொடர்ந்து அவரது ஆடைகளை இழுத்து தாக்கியுள்ளார். இதில் மயங்கிய பரமேஸ்வரி, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, பெண் வன்கொடுமை உள்பட, 3 பிரிவுகளில் கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்தனர். நேற்று மாரிமுத்துவை கைது செய்தனர்.

