/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
வீட்டை அபகரிக்க முயற்சி பா.ம.க, நிர்வாகி மீது 'பகீர்'
/
வீட்டை அபகரிக்க முயற்சி பா.ம.க, நிர்வாகி மீது 'பகீர்'
வீட்டை அபகரிக்க முயற்சி பா.ம.க, நிர்வாகி மீது 'பகீர்'
வீட்டை அபகரிக்க முயற்சி பா.ம.க, நிர்வாகி மீது 'பகீர்'
ADDED : பிப் 20, 2024 10:06 AM
சேலம்: சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம், பெரிய கிருஷ்ணாபுரம் வி.ஏ.ஒ., அலுவலக பின்புற பகுதியை சேர்ந்தவர் சந்திரா, 50. இவர் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று மனு அளித்த பின் கூறியதாவது:
என் கணவர் பாண்டியன், 2018ல் இறந்துவிட்டதால், தனியாக வசிக்கும் நான், தொண்டு நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னுடைய வீட்டை அபகரிக்க திட்டமிட்டு, கணவரின் முதல் மனைவியின் மகன் மனோஜ் பிரபாகரன், 30, அடிக்கடி பிரச்னை செய்து வருகிறார். வீட்டுக்கு செல்லும் பாதையில் மண்ணை கொட்டி மறித்துள்ளார். மேலும் கம்பிவேலி போட முயன்றதை தடுத்ததால், தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதுபற்றி, ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. நாங்கள், பா.ம.க.,வில் இருப்பதால், எங்களை எதுவும் செய்ய முடியாது என கூறி, 20 பேருடன் வந்து மனோஜ் பிரபாகரன் அடிக்கடி மிரட்டுவதால், அவர் உள்பட கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
பா.ம.க.,வை சேர்ந்த, சேலம் கிழக்கு மாவட்ட கலை இலக்கிய அணி செயலராக இருக்கும் மனோஜ் பிரபாகரன் கூறுகையில், ''எங்களுடைய சொத்தையும் சேர்த்து, சந்திரா அபகரிக்க முயன்றதால், எங்கள் இடத்துக்கு வேலி அமைத்து பாதுகாத்து கொண்டோம். ஏத்தாப்பூர் போலீசார், பிரச்னை தொடர்பாக இரு தரப்பிலும் வழக்கு பதிந்துள்ளனர். சட்ட ரீதியாக தீர்த்து கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். சிலரின் துாண்டுதல் பேரில், எங்கள் குடும்பத்தார் மீது பொய் புகார் கூறி, சந்திரா களங்கத்தை ஏற்படுத்தி வருகிறார்,'' என்றார்.

