/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
ரயில் நிலையத்தில் சந்தனக் கட்டை கடத்த முயற்சி
/
ரயில் நிலையத்தில் சந்தனக் கட்டை கடத்த முயற்சி
ADDED : மார் 20, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:சேலம் ரயில்வே ஸ்டேஷன், 5வது நடை மேடையில், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. அதன் பின் பகுதியில் சில சந்தன மரங்கள் உள்ளன.
அந்த மரங்களை, நேற்று முன்தினம் இரவு மர்ம கும்பல் வெட்டியுள்ளது. ஒரு மரத்தை முழுதும் வெட்டி, போடிநாயக்கன்பட்டி ஏரிக்கு கொண்டு சென்ற கும்பல், அங்கு வைத்து துண்டு, துண்டுகளாக வெட்டி பின், அதன் மேற்பகுதியை மட்டும் சீவி கடத்திச்சென்றது. அது, 100 கிலோவுக்கு மேல் இருக்கலாம் என தெரிகிறது.