/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மொபைல் பறித்த வாலிபருக்கு 'கவனிப்பு'
/
மொபைல் பறித்த வாலிபருக்கு 'கவனிப்பு'
ADDED : மே 26, 2025 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:திருவண்ணாமலை மாவட் டம் பழையனுார், பாண்டி சாலை தெருவை சேர்ந்தவர் விநாயகம், 29. திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் தையல் தொழில் செய்கிறார். சமீபத்தில் சொந்த ஊர் சென்றவர், கடந்த, 24ல் சேலம் வந்து, திருப்பூர் பஸ்சில் ஏறி அமர்ந்திருந்தார்.
பஸ் புறப்பட்ட தருவாயில், அவர் அருகே இருந்தவர், விநா-யகம் சட்டை பாக்கெட்டில் இருந்த, உயர் ரக மொபைல் போனை பறித்து தப்ப முயன்றார். விநாயகம் கூச்சலிட, சக பயணியர், அவரை பிடித்து தர்ம அடி கொடுத்து, பள்ளப்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சேலம், நெத்திமேடு, கே.பி.கரட்டை சேர்ந்த ராஜூ, 49, என தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மொபைல் போனை மீட்டனர்.