ADDED : நவ 12, 2026 01:37 AM
அ நிறம் | அளவு
சேலம்: சேலம், கிச்சிப்பாளையம் எஸ்.எம்.சி., காலனியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சிராஜூதீன், 35. இவரது சித்தி சபீனா, அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். அந்த கடையில், அப்பகுதியை சேர்ந்த ரவுடி நந்தகுமார், 27, 'மாமூல்' கேட்டு பிரச்னை செய்துள்ளார். தர மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்தார். தொடர்ந்து கடந்த, 8ல் மளிகை கடை முன் பட்டாசு வெடித்து, அலப்பறையில் ஈடுபட்டு, சிராஜூதீன் மீது பட்டாசுகளை வீசியுள்ளார். அதை தட்டிக்கேட்டதில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது.
நேற்று காலை, 7:00 மணிக்கு, சிராஜூதீன் வீடு முன் நிறுத்தியிருந்த ஆட்டோ எரிந்த நிலையில் காணப்பட்டது. 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்தபோது, ரவுடி தீ வைத்தது பதிவாகி இருந்தது. சிராஜூதீன் புகார்படி, கிச்சிப்பாளையம் போலீசார், நந்தகுமாரை கைது
செய்தனர்.
