UPDATED : நவ 12, 2026 02:18 AM
ADDED : நவ 12, 2026 01:38 AM

சேலம்: சேலம், கொண்டலாம்பட்டி அருகே புத்துார் அக்ரஹாரம் ஏரிக்கு, சேலத்தாம்பட்டி ஏரியில் இருந்து உபரிநீர் மற்றும் திருமணிமுத்தாற்றில் இருந்து தண்ணீர் வருகிறது. இந்நிலையில் புத்துார் அக்ரஹாரம் ஏரியில், இரு நாட்களாக ஏராளமான மீன்கள் செத்து ஆங்காங்கே மிதக்கின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.
இதுகுறித்து, அந்த ஏரியின் மீன் பிடி குத்தகைதாரர் தமிழ்செல்வன் கூறுகையில், ''கடந்த வாரம் பெய்த தொடர் மழையை பயன்படுத்தி சாயம், ரசாயன பட்டறைகளில் இருந்து கழிவை, ஆற்றில் கலந்துள்ளனர். ஆற்றில் இருந்து ஏரிக்கு வந்த நீரின் காரத்தன்மைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் எனக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஏரிக்கு வரும் நீரில் ரசாயன கழிவு கலப்பதை தடுக்க வேண்டும். ஏரிக்கரையில் குப்பை கொட்டுவதையும் தடுக்க வேண்டும்,'' என்றார்.இதையடுத்து செத்து மிதந்த மீன்களை அகற்றும் பணி ஊராட்சி சார்பில் நடக்கிறது.
