/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
விநாயகா மிஷன் பல்கலைக்குட்பட்ட அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு விருது

ADDED : ஜூலை 05, 2024 01:06 AM
சேலம்: விநாயகா மிஷனின் சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவமனை வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழிற்நுட்ப கல்லுாரி வளாகம் ஆகியவற்றில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு, இவ்வாண்டின் சிறந்த கல்லுாரி விருது வழங்கப்பட்டுள்ளது.இ.பி.ஜி., என்பது இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் செயல்படும் ஓர் முன்னணி ஆலோசனை நிறுவனம்.
இது பொருளாதார ரீதியானஆலோசனைகளை வழங்குவதோடு கல்வியியல் சார்ந்த பல்வேறு ஆலோசனை, மதிப்பீடுகளை வழங்கி வருகிறது. அதன்படி இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்க-லையில் சமீபத்திய கல்வியில் புதுமை மாநாட்டை நடத்தியது. அதில் விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் பேசினார். அத்துடன் சர்வதேச வளர்ச்சிக்கு ஏற்ப கல்வியல் செயல்பாடுகளை சிறந்த முறையில் நடத்தி வருவதை மையப்படுத்தி, விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு, 'இவ்வாண்டின் சிறந்த அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்-லுாரி' விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது கிடைக்க சிறந்த பங்களிப்பாற்றிய துறை டீனை, பல்கலை வேந்தர் கணேசன், துணைத்தலைவர் அனுராதா, துறை பேராசிரியர்கள் பாராட்டினர்.