/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றி விழிப்புணர்வு
/
பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றி விழிப்புணர்வு
ADDED : ஜூலை 20, 2025 05:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டூர்: வனப்பகுதி மட்டுமின்றி, மலை அடிவார பகுதிகளில் மரம், செடி, கொடிகளின் முக்கியத்துவத்தை அறியாமல், பிளாஸ்டிக் பாட்டில்கள், காகிதங்களை வீசிச்செல்கின்றனர். அவை மட்கி போகாமல் செடி, கொடிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தி சுற்றுச்சூ-ழலை பாதிக்கிறது.
இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கொளத்துார், சாம்பள்ளி ஊராட்சி மாசிலாபாளையம் மலை அடிவாரம் நேற்று, மேட்டூர் சமூக காடுகள் சார்பில், தன்னார்வலர்கள், பள்ளி மாணவர்கள், மக்கள், பிளாஸ்டிக் பாட்டில்களை அகற்றி சுத்தம் செய்தனர். வனச்சரகர் பெருமாள் உள்ளிட்ட வனத்துறையினர், ஊராட்சி செயலர் குமார் பங்கேற்றனர்.