/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
/
காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு
ADDED : ஆக 10, 2025 02:30 AM
வீரபாண்டி, வீரபாண்டி வட்டாரத்தில் வேளா ண்மைத்துறை சார்பில், 40க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு, உழவரை தேடி வேளாண்மை -உழவர் நலத்துறை நிகழ்ச்சி சென்னகிரியில் நேற்று முன்தினம் நடந்தது. வேளாண் அலுவலர் நிவேதா தலைமை வகித்து, திட்ட முகாம்கள் ஒவ்வொரு மாதத்திலும், 2, 4வது வெள்ளியன்று, வட்டாரத்தில் இரு கிராமங்களில் நடத்தப்படும். இதன்மூலம் விவசாயிகளின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதோடு, அரசு நலத்திட்ட உதவிகள் விரைவாக சென்றடையும் என அறிவுறுத்தினார்.
மேலும் நுண்ணீர் பாசனம், பயிர் காப்பீடு, துவரை நடவு, நில உடமை பதிவு, இயற்கை விவசாயம், உழவன் செயலி, காண்டாமிருக வண்டு கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. உதவி வேளாண் அலுவலர் தனபால் உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல் தோட்டக்கலை சார்பில் மாரமங்கலத்துப்பட்டியில், துணை தோட்டகலை அலுவலர் சசிகுமார் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.