/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிக்கன் சாப்பிட்டபோது வலிப்பு வங்கி மேலாளர் பலியால் விசாரணை
/
சிக்கன் சாப்பிட்டபோது வலிப்பு வங்கி மேலாளர் பலியால் விசாரணை
சிக்கன் சாப்பிட்டபோது வலிப்பு வங்கி மேலாளர் பலியால் விசாரணை
சிக்கன் சாப்பிட்டபோது வலிப்பு வங்கி மேலாளர் பலியால் விசாரணை
ADDED : ஜன 09, 2025 07:45 AM
மேட்டூர்: சிக்கன் சாப்பிட்டபோது, வலிப்பு ஏற்பட்டு வங்கி மேலாளர் பலி-யான நிலையில், சந்தேகம் இருப்பதாக அவரது மனைவி புகாரால், போலீசார் விசாரிக்கின்றனர்.சேலம், சித்தனுார், புவனேஸ்வரி நகரை சேர்ந்தவர் தினேஷ்-குமார், 40. மேட்டூரில் உள்ள தனியார் வங்கி கிளையில், மேலா-ளராக இருந்தார். இவரது மனைவி கவிதா, 37. சேலம், சூரமங்க-லத்தில் உள்ள தனியார் வங்கி கிளையில், மேலாளராக பணிபுரி-கிறார். நேற்று முன்தினம், வேலைக்கு சென்ற தினேஷ்குமார், இரவு, 8:30 மணிக்கு, மனைவிக்கு போன் செய்தார்.
அப்போது, 'ஓசூரில் இருந்து வங்கி மேலாளர் பரணிதரன், மேட்டூர் வந்துள்ளார். அவருடன் மேட்டூரில் உள்ள ஓட்டலில் இரவு சாப்பிட்டு விட்டு வீட்டுக்கு வருகிறேன்' என, தினேஷ்-குமார் கூறியுள்ளார். இரவு, 10:00 மணிக்கு, பரணிதரன், மொபைலில் கவிதாவை தொடர்பு கொண்டார். அப்போது, 'நான், தினேஷ்குமார், அவருடன் பணிபுரியும் நண்பர் சந்திர-மோகன் ஆகியோர், புதுச்சாம்பள்ளியில் உள்ள கடையில் சிக்கன் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது தினேஷ்குமாருக்கு புரையேறி வலிப்பு ஏற்பட்டது. அவரை குஞ்சாண்டியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று முதலுதவி அளித்து விட்டு மேல் சிகிச்சைக்கு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறோம்' என, பரணிதரன் கூறினார்.உடனே கவிதா, உறவினர்களுடன், மேட்டூர் அரசு மருத்துவம-னைக்கு சென்றார். அதற்குள் தினேஷ்குமார் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதிர்ச்சியடைந்த கவிதா, கணவர் சாவில் மர்மம் உள்ளதாக கூறி, கருமலைக்கூடல் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இதனால் சிக்கன் சாப்பிட்டபோது வலிப்பு வந்-ததில் இறந்தாரா, வேறு காரணத்தால் இறந்தாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.

