/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டியலின மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும்: பா.ம.க., எம்.எல்.ஏ., அருள்
/
பட்டியலின மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும்: பா.ம.க., எம்.எல்.ஏ., அருள்
பட்டியலின மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும்: பா.ம.க., எம்.எல்.ஏ., அருள்
பட்டியலின மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும்: பா.ம.க., எம்.எல்.ஏ., அருள்
ADDED : ஏப் 16, 2024 07:19 AM
சேலம் : சேலம் தொகுதியில், பட்டியலின மக்களுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் செய்து கொடுக்கப்படும் என, பிரசாரத்தின் போது பா.ம.க., எம்.எல்.ஏ., அருள் உறுதியளித்தார். சேலம் தொகுதி, பா.ம.க., வேட்பாளர் அண்ணா துரைக்கு ஆதரவு கேட்டு நேற்று மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., அருள் தென் அழகாபுரத்தில் பிரசாரம் மேற் கொண்டார்.
அப்போது அவர் பேசியதாவது: சேலம் தொகுதியில் பட்டியலின மக்கள் வசிக்கும் தென் அழகாபுரம் உட்பட அனைத்து பகுதிகளிலும், ரேஷன் கடைகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர சட்டசபையில் கோரிக்கை விடுத்துள்ளேன். விரைவில் கூட்டு பாதாள சாக்கடை திட்டம், பட்டியலின மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிலும் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
தொகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும், ஸ்மார்ட் கிளாஸ் திட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர், சாலை, சாக்கடை, சுகாதார வசதிகள் அனைத்தும் மத்திய அரசின் நிதியுதவியில் செய்து தரப்படும். விபத்துக்களை தடுக்க புதுரோடு உட்பட நகரின் முக்கிய இடங்களில், சாலைகள் விரிவுப் படுத்தப்பட்டு ரவுண்டானா அமைக்கப்படும். மத்திய அரசின் நிதியுதியுடன், பனமரத்துப்பட்டி ஏரியை சுத்தம் செய்து சேலம் மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதோடு, 24 மணி நேரம் குடிநீர் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். விவசாயிகளுக்கு தங்கு தடையின்றி கடன் கிடைக்கவும், இயற்கை பேரிடம் காலங்களில் மத்திய அரசின் சார்பில் பயிர்களுக்கான இழப்பீடு பெற்று தரப்படும். கயிறு, கைத்தறி, தொழிலாளர்களின் நலன் காக்க சிறப்பு திட்டங்கள் கொண்டு வரப்படும். இவ்வாறு பேசினார்.
பசுமை தாயகத்தின் இணை செயலாளர் சத்ரியசேகர், த.மா.கா., மாவட்ட தலைவர் உலக நம்பி, பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ரமேஷ், பகுதி செயலாளர் நடராஜன், பட்டியல் இன பொதுச் செயலாளர் கிரி, இளைஞரணி மணிகண்டன், முருகன், விஜயன், நான்காவது வார்டு பெருமாள், அழகிரி, 17 வது வார்டு பா.ம.க., நிர்வாகிகள் கெளதமன், சின்னமுத்து, ராஜசேகர், சின்னதம்பி, பாய் சுந்தர்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

